தளபதி 64: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள்!

news18
Updated: July 3, 2019, 6:20 PM IST
தளபதி 64: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள்!
விஜய்
news18
Updated: July 3, 2019, 6:20 PM IST
‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘பிகில்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார்.

தற்போது விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மீண்டும் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா


தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

நடிகை ராஷி கண்னா


ராஷ்மிகா மந்தனா மட்டுமல்லாது நடிகை ராஷி கண்ணாவிடமும் தளபதி 64 படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

படிக்க: வனிதாவுக்கு மட்டும் இல்ல... லாஸ்லியாவுக்கும் புதிய பிரச்னை!

வீடியோ பார்க்க: நஷ்டம் ஏற்படுத்துகிறதா விஜய் படங்கள்?

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...