மருத்துவத்துறை ஊழல்... ‘தளபதி 64’ படத்தின் டைட்டில் லீக்?

மருத்துவத்துறை ஊழல்... ‘தளபதி 64’ படத்தின் டைட்டில் லீக்?
நடிகர் விஜய்
  • Share this:
‘தளபதி 64’ படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘தளபதி 64’  என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் ஆன்ட்ரியா, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் நடிகர் விஜய் ஐடி கார்டு அணிந்து மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். இதனால் இந்தப் படத்தில் விஜய் ஆசிரியராக நடிக்கிறாரா அல்லது மாணவராக நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினி - கமல் 44 வருடங்கள் ஒன்றாக பயணிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

இதுஒருபுறமிருக்க, கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதாலும் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாலும், இந்தப் படம் கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

Loading...

இப்படியும் நடந்துச்சா : லோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்த விஜய் - வியந்துபோன இயக்குநர்!

இந்நிலையில் இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தான் உண்மை தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.
First published: November 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...