கமல் படத்தின் ரீமேக்கா?... அனிருத் இசையில் பாடும் விஜய் - ‘தளபதி 64’ நியூ அப்டேட்!

கமல் படத்தின் ரீமேக்கா?... அனிருத் இசையில் பாடும் விஜய் -  ‘தளபதி 64’ நியூ அப்டேட்!
விஜய் - அனிருத்
  • News18
  • Last Updated: November 19, 2019, 3:13 PM IST
  • Share this:
‘தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் தனது சொந்தக் குரலில் பாடல் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 64 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் ஆன்ட்ரியா, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, கௌரி கிஷன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.




சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் அனிருத் இசையில் நடிகர் விஜய் மீண்டும் பாடல் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அனிருத் இசையில் கத்தி படத்தில் செல்ஃபி புள்ள பாடலைப் பாடியிருந்தார். அந்தப் பாடல் ஹிட் அடித்த நிலையில் மீண்டும் அனிருத் இசையில் விஜய் பாட இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுஒருபுறமிருக்க கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதாலும் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாலும், இந்தப் படம் கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

Loading...

Also see:


 
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com