‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்!

news18
Updated: June 14, 2019, 4:38 PM IST
‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட்!
விஜய்
news18
Updated: June 14, 2019, 4:38 PM IST
‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!
Loading...
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...