தளபதி 64: விஜய்க்கு வில்லனாக அர்ஜூன், ஜோடியாக ராஷி கண்ணா?

இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிப்பதாகவும் , படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

news18
Updated: July 13, 2019, 7:03 PM IST
தளபதி 64: விஜய்க்கு வில்லனாக அர்ஜூன், ஜோடியாக ராஷி கண்ணா?
விஜய்
news18
Updated: July 13, 2019, 7:03 PM IST
‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அர்ஜுனும், ஜோடியாக ராஷி கண்ணாவும் நடிப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் பட்ம தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தை அடுத்து விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விஜய் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக முதலில் ஒரு தகவல் கசிந்தது. இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிப்பதாகவும் , படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் பிஸியாக இருக்கிறாராம். கைதி படத்தின் பணிகள் முடிவுக்கு வந்தவுடன் தான் தளபதி 64 பட பணிகளை தொடங்குவார் என்றும் நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது உலவும் செய்திகளில் உண்மையில்லை என்பதும் தெரிய வருகிறது.

வீடியோ பார்க்க: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்த சூர்யா!
Loading...
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...