தளபதி 63 அப்டேட்: வாழ்த்துச் சொன்ன திமுக எம்.எல்.ஏ!

news18
Updated: June 19, 2019, 12:12 PM IST
தளபதி 63 அப்டேட்: வாழ்த்துச் சொன்ன திமுக எம்.எல்.ஏ!
தளபதி 63
news18
Updated: June 19, 2019, 12:12 PM IST
விஜய் நடிப்பில் உருவாகிவரும் அவரது 63-வது படத்தின் முதல் அப்டேட் இன்று வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


படத்தைப் பற்றிய படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து திமுகவின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.



ஜெ. அன்பழகன் திமுக சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது தமிழ் சினிமா தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!

First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...