’ரெடியா இருங்க’... ரசிகர்களுக்கு அப்டேட் தந்த ‘தளபதி 63’ தயாரிப்பாளர்

தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்பார்ப்பில் உள்ளனர்.

Prabhu Venkat | news18
Updated: June 19, 2019, 9:37 AM IST
’ரெடியா இருங்க’... ரசிகர்களுக்கு அப்டேட் தந்த ‘தளபதி 63’ தயாரிப்பாளர்
விஜய்
Prabhu Venkat | news18
Updated: June 19, 2019, 9:37 AM IST
தளபதி 63 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்பார்ப்பில் உள்ளனர்.படம் குறித்த அப்டேட்டுக்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் தளபதி 63 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நிச்சயமாக அது ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் தான் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து #Thalapathy63UpdateDay என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரண்ட் செய்துள்ளனர்.

First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...