‘தளபதி 63’ படத்தைக் கைப்பற்ற கடும்போட்டி!

‘தளபதி 63’ படத்தைக் கைப்பற்ற கடும்போட்டி!
தளபதி 63
  • News18
  • Last Updated: May 27, 2019, 7:54 PM IST
  • Share this:
விஜய் நடித்து வரும் அவரது 63-வது படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு மட்டுமே ரூ.70 கோடிக்கும் மேல் பங்கு கிடைத்ததாகவும், அதனால் இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் விலகியுள்ளது. தற்போது தளபதி 63 படத்தைக் கைப்பற்ற ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இதற்கு முன்னர் வெளியான விஜய் படங்களின் தமிழக வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இதுவரை வெளியான விஜய் படங்களின் தமிழக உரிமைக்கு கொடுக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக இந்தப் படத்துக்கு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்