விஜய் படத்தில் ஷாருக்கானா? - படக்குழு பதில்

நடிகர் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தளபதி 63 படத்தில் நடிப்பதாக பேசத் தொடங்கினர்.

news18
Updated: March 28, 2019, 5:26 PM IST
விஜய் படத்தில் ஷாருக்கானா? - படக்குழு பதில்
ஷாருக்கான் | விஜய்
news18
Updated: March 28, 2019, 5:26 PM IST
தளபதி 63 படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்- அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்தப் படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அட்லி மற்றும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வதை அறிந்தனர்.

இதையடுத்து நடிகர் ஷாருக்கான் கவுரவத் தோற்றத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தளபதி 63 படத்தில் நடிப்பதாக பேசத் தொடங்கினர்.

Loading...
இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியது. ஷாருக்கான் இந்தப் படத்தில் நடிப்பது உண்மைதானா என்று படக்குழுவிடம் விசாரித்தபோது உண்மையில்லை என்று கூறப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வுக்கான சிறப்பு பாடல் - வீடியோ

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...