அட்டகாசமான ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

news18
Updated: June 21, 2019, 6:28 PM IST
அட்டகாசமான ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தளபதியின் 63-வது படம் பிகில்
news18
Updated: June 21, 2019, 6:28 PM IST
‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


படத்தைப் பற்றிய படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டர் பதிவில் தெரிவிட்திருந்தார்.இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.அதில், தந்தை மற்றும் மகன் கதாப்பாத்திரத்தை குறிக்கும் வகையில் இரண்டு விஜய் இருக்கும் வகையில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயர் பிகில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...