‘தளபதி 63’ படத்துக்கு டைட்டில் ரெடி! - பட்டியலில் உள்ள 4 தலைப்புகள் இதுதான்

‘தளபதி 63’ படத்துக்கு டைட்டில் ரெடி! - பட்டியலில் உள்ள 4 தலைப்புகள் இதுதான்
விஜய்
  • News18
  • Last Updated: May 14, 2019, 4:22 PM IST
  • Share this:
‘தளபதி 63’படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக மேயாதமான் பட நாயகி இந்துஜா நடிக்கிறார்.




இந்நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் சமூகவலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் தெறி, மெர்சல் என இரண்டு மாஸ் டைட்டில்களைக் கொடுத்த அட்லீ இம்முறை  ‘வெறி’ அல்லது வெறித்தனம் ஆகிய இரண்டு டைட்டில்களை ஒன்றை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப் படத்தில் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மைக்கேல் அல்லது கேப்டன் மைக்கேல் என்ற டைட்டில்களும் பரிசீலனையில் வைத்துள்ளது படக்குழு.

தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ டைட்டிலை அறிந்துகொள்ள விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

படிக்க: ‘தனி ஒருவன் 2’ புதிய அப்டேட் கொடுத்த இயக்குநர்! - எதிர்பார்ப்புகளுடன் ராம்

வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்