‘விஜய் 63’ ஃபர்ஸ்ட் லுக்: சூசகமாக அப்டேட் கொடுத்த பிரபலம்!

‘விஜய் 63’ ஃபர்ஸ்ட் லுக்: சூசகமாக அப்டேட் கொடுத்த பிரபலம்!
விஜய்
  • News18
  • Last Updated: May 23, 2019, 2:02 PM IST
  • Share this:
‘விஜய் 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து ரசிகர்களுக்கு மறைமுகமாக அப்டேட் கொடுத்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

மெர்சல், தெறி படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய்-இயக்குநர் அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.தளபதி 28 - விஜய்க்கு ஹிட் கொடுத்த 28 இயக்குநர்கள்!

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்