‘தளபதி 63’ பட பிஸியிலும்... ‘தர்பார்’ படத்துக்காக அட்லி செய்த காரியம்!

news18
Updated: April 9, 2019, 4:32 PM IST
‘தளபதி 63’ பட பிஸியிலும்... ‘தர்பார்’ படத்துக்காக அட்லி செய்த காரியம்!
அட்லீ - திரைப்பட இயக்குநர்
news18
Updated: April 9, 2019, 4:32 PM IST
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

நாளை முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க காவல்துறை பின்னணியில் நடைபெறும் கதைக்களம் என்பதை இப்படத்தின் போஸ்டர் வெளிப்படுத்துகிறது.குறிப்பாக, மும்பையின் அடையாள சின்னமான GATEWAY OF INDIA, RIFLE துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், ஐ.பி.எஸ். BADGE, போலீஸ் பெல்ட், தொப்பி, கைவிலங்கு மற்றும் போலீஸ் நாய் என அனைத்துமே காவல்துறையை குறிக்கும் வண்ணம் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று முகம், பாண்டியன் ஆகிய படங்களுக்குப் பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த்.

ஸ்டைலாகவும், வித்தியாசமாகவும் வெளிவந்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையேயும், திரைத்துறை வட்டாரத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் அட்லி, “மாஸ் ஏ.ஆர்.முருகதாஸ் சார். ரஜினிகாந்த் சார் வேற லெவல். டார்லிங் நயன்தாராவுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்”என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லி தற்போது தளபதி 63 படத்துக்காக பிரமாண்ட செட் அமைத்து பிஸியாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: ஆதரிப்பதாக சொன்னவர் இன்னும் அமைதி காக்கிறார் - ரஜினி மீது கமல் வருத்தம்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...