’தளபதி 63': முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு!

கடந்த மாதம் 21-ம் தேதி முதல் சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

news18
Updated: February 11, 2019, 5:59 PM IST
’தளபதி 63': முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு!
விஜய்
news18
Updated: February 11, 2019, 5:59 PM IST
‘தளபதி 63’ படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு சி.மைக்கேல் என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்தநிலையில் படத்தின் முதல் பாடல் ஷூட்டிங் முடிவடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் கருத்துபதிவிட்டுள்ளனர்.இந்தப் பாடலில் நடிகர் விஜய் குழந்தைகளுடன் நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் படத்தின் முதல் பாடல் வழக்கம்போல் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

வர்மா பட விவகாரம்: தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு வேண்டும் - வசந்தபாலன் - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...