2019-ம் ஆண்டில் இதைவிட சிறப்பு இல்லை- விஜய்க்கு நன்றி சொன்ன கதிர்

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப்பெற்ற நடிகர் கதிர் நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ, படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

news18
Updated: January 12, 2019, 8:25 PM IST
2019-ம் ஆண்டில் இதைவிட சிறப்பு இல்லை- விஜய்க்கு நன்றி சொன்ன கதிர்
நடிகர் கதிர் | விஜய்
news18
Updated: January 12, 2019, 8:25 PM IST
பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர், விஜய்யுடன் இணைந்து நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்கார் படத்தை அடுத்து நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்யின் பேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளார். நடிகர் விவேக், யோகிபாபு ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சமீபத்தில் படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு 20-ம் தேதியிலிருந்து துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தில் நடிகர் கதிர் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை கொண்டாடிய ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி மகிழ்ந்தனர்.

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப்பெற்ற நடிகர் கதிர் நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டில் தனக்கு இதைவிட சிறப்பு எதுவும் இல்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

அரை நிர்வாண கடல் கன்னியாக மாறிய ஆன்ட்ரியா - வைரலாகும் புகைப்படம்இந்த ஆண்டின் தீபாவளிக்கு படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடைகளில் மறைத்து ரூ. 8 கோடி தங்கத்தை கடத்திய கொரிய பெண்கள் - வீடியோ

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...