• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி எப்படி இருக்கிறது...?

கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி எப்படி இருக்கிறது...?

தலைவி

தலைவி

ஜெயலலிதாவின் ஆகச் சிறந்த வரலாற்று ஆவணமாக உருவாக வேண்டிய திரைப்படம் ஒரு சில தவறுகளால் மற்றும் ஒரு திரைப்படமாக கடந்து செல்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இன்று வெளியாகியுள்ளது தலைவி.

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்திலும், கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசரும், ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் நடித்து உருவாகி உள்ள திரைப்படம் தலைவி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெயலலிதா நடிக்க சினிமாத்துறையில் அறிமுகமான காலகட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு முதலமைச்சர் அரியாசனத்தில் அமர்ந்த வரை உள்ள போராட்டங்களை இந்த திரைப்படம் திரைக்கதையாக உருவாக்கியுள்ளது. எம்ஜிஆரின் திமுக அபிமானம், எம்ஜிஆர் கருணாநிதிக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை தலைவி திரைப்படம் பேச முயற்சி செய்திருந்தாலும் இந்த காட்சிகள் மனதில் நிலைபெறும் அளவிற்கு அழுத்தமாக இல்லாதது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

ஜெயலலிதா குறித்து நன்கு அறிந்த ஒரு சில நிகழ்வுகளை மீண்டும் காட்சிப்படுத்தி உள்ள படக்குழுவினர் ஜெயலலிதாவுக்கான தனி குணாதிசயம் உலகிற்கு தெரியாத ரகசியம் என எதையும் படமாக்காதது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Also read... சிம்புவின் பத்து தலயில் நடிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன்...!

நடிகையர் திலகம் திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து இருந்ததன் தாக்கம் கங்கனாவிடம் இல்லாதது படத்திற்கு மேலும் பின்னடைவாக உள்ளது. படத்தில் ஜெயலலிதாவாக அல்லாமல் கங்கனாவாகவே இருப்பதன் காரணமாக ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இது என்ற உணர்வு ஏற்பட மறுக்கிறது.

மேலும் ஜெயலலிதா என்ற பெயரை ஜெயா என்றும், எம்ஜிஆர் என்ற பெயரை எம் ஜே ஆர் என்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி பெயர்களும் மாற்றி வைக்கப்பட்டுள்ளதால் இது உண்மையான வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக அல்லது கற்பனை கதையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கதை கருவாக எந்த பகுதியை கையாளப் போகிறோம் என்பதில் இருந்த குழப்பம் எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் அழுத்தம் இல்லாமல் பதிவு செய்ய காரணமாக மாறியுள்ளது.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசையிலும் பாடலிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி திரைப்படத்திற்கு தேவையான பணி செய்துள்ளார். ஒளிப்பதிவு படத்தொகுப்பு என கைதேர்ந்த படக்குழுவின் பங்களிப்பு நேர்த்தியாக திரைப்படத்தை உருவாக்கி உள்ளது. ஜெயலலிதாவின் ஆகச் சிறந்த வரலாற்று ஆவணமாக உருவாக வேண்டிய திரைப்படம் ஒரு சில தவறுகளால் மற்றும் ஒரு திரைப்படமாக கடந்து செல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: