• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெயலலிதாவின் முதல்வர் வாழ்க்கை: தலைவி 2ம் பாகம்- கங்கனாவுடன் பேச்சுவார்த்தை

ஜெயலலிதாவின் முதல்வர் வாழ்க்கை: தலைவி 2ம் பாகம்- கங்கனாவுடன் பேச்சுவார்த்தை

தலைவி திரைப்படம்

தலைவி திரைப்படம்

சினிமாவில் இருந்து அவர் முதல்வராகுவதும் வரை மட்டுமே முதல் பாகத்தில் சொல்ல விரும்பினோம். அரசியல் என்பது முற்றிலும் வேறு பகுதி. அதனை 15 நிமிடங்களில் காட்டிட முடியாது என்று ரஜத் அரோரா கூறியுள்ளார்.

  • Share this:
    ஜெயலலிதா முதலமைச்சரான பின்பு அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து தலைவி திரைப்படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் இது தொடர்பாக நடிகை கங்கனாவுடன் பேச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்டு தலைவி என்னும் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க இருந்தார். இதில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராகவும் நடித்திருந்தனர்.

    கடந்த மாதம் திரையரங்கில் தலைவி திரைப்படம் வெளியானது. ஜெயலலிதாவாக நடித்திருந்த கங்கனா ரனாவத்தின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.  ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு திரைப்படம் முடிந்தது. திரைப்படத்தின் சட்டப்பேரவை தாக்குதல் காட்சி உள்ளிட்டவை  தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில், தலைவி திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராக வாய்ப்பு உள்ளதாக படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் ரஜத் அரோரா தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பாலிவுட் லைவ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர்,  ‘சினிமாவில் இருந்து அவர் முதல்வராகுவதும் வரை மட்டுமே முதல் பாகத்தில் சொல்ல விரும்பினோம். அரசியல் என்பது முற்றிலும் வேறு பகுதி. அதனை 15 நிமிடங்களில் காட்டிட முடியாது.

    இதையும் படிங்க: வலிமை ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    அவரது அரசியல் குறித்து  காட்ட வேண்டும் என்றால் அதனை இரண்டாம் பாகத்தில் காட்டலாம் என்ற எண்ணம் எப்போது இருந்தது.  கதை வடிவம் பெறுகிறதா என்று பார்ப்போம். இது தொடர்பாக கங்கனா ரனாவத் உடன் பேசினோம்’ என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: