இரு ஓடிடி தளங்களில் வெளியாகும் தலைவி!

தலைவி

இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகாமல் தள்ளிப் போனது.

 • Share this:
  தலைவி படம் இரு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அதன் இந்திப் பதிப்பை ஒரு ஓடிடி தளமும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகளை இன்னொரு ஓடிடி தளமும் வெளியிடுகிறது.

  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா உடல் எடையை அதிகரித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Thalaivi
  தலைவி


  இந்த வருட ஆரம்பத்தில் வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகாமல் தள்ளிப் போனது. பல படங்களைப் போல தலைவியும் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு தரப்பு மறுத்தது. திரையரங்கில் மட்டுமே தலைவி வெளியாகும் என அறிவித்தனர். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரான தலைவி, திரையரங்கில் வெளியானால் மட்டுமே அந்த வசூலை பெறும் என்பதால் திரையரங்கு வெளியீட்டில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். ஆகஸ்ட் 19 அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் திரையரங்குகளில் வெளியானது பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. இதையடுத்து செப்டம்பர் 10-ம் தேதி தலைவி திரையரங்குகளில் வெளியாகிறது.

  திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு தலைவியின் இந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் பதிப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: