Thalaivi: திரையரங்கில் வெளியாகும் தலைவி!

தலைவி

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில், ஜெயலலிதாவின் சுயசரிதை தலைவி என்ற பெயரில் தயாராகியுள்ளது. கங்கனா ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் இதில் நடித்துள்ளனர்.

  • Share this:
    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில், ஜெயலலிதாவின் சுயசரிதை தலைவி என்ற பெயரில் தயாராகியுள்ளது. கங்கனா ஜெயலலிதாவாகவும், அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும் இதில் நடித்துள்ளனர்.

    தமிழ், இந்தியில் தயாராகியிருக்கும் இப்படம் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. தலைவி படப்பிடிப்பு சென்ற வருட இறுதியில் முடிவடைந்தது. ஏப்ரல் 23 படம் வெளியாகும் என முறைப்படி அறிவித்தனர். அப்போது தான் மகாராஷ்டிரா அரசு, திரையரங்குகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    தலைவி பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இதுபோன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலத்தில் வெளியிட்டால், போட்ட பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படும். அதனால், தயாரிப்பாளர்கள் தேதி குறிப்பிடாமல் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

    கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்களாகும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால், தலைவியை ஓடிடியில் வெளியிட இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பியது. அதற்கு தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    தலைவி முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும். அதன் பிறகே ஓடிடி-யில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். தலைவியின் தமிழ்ப் பதிப்பு அமேசானிலும், இந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸிலும் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: