எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த் சாமி... வெளியானது 'தலைவி' பட டீசர்

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த் சாமி... வெளியானது 'தலைவி' பட டீசர்
அரவிந்த் சாமி
  • News18
  • Last Updated: January 17, 2020, 10:44 AM IST
  • Share this:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின்  டீசர்  தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.


Also read... அரவிந்த் சாமியா இது...? நியூ லுக் பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த சாமியின் தோற்றத்தை அரவிந்த  சாமி தனது ட்விட்ட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தலைவி படத்தில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த் சாமி பாடி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Also see...
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்