தலைவி படத்தை ரஜினிக்காக ஸ்பெஷலாக திரையிட்டுள்ளனர். படத்தைப் பார்த்தவர், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை வெகுவாக பாராட்டியுள்ளார்.
தலைவி படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்பதால் இந்திய அளவில் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக வட இந்தியாவில் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணியாகவே தெரியும். அவரது ஆட்சி குறித்து எதுவும் தெரியாது.
தலைவி படம் குறித்த விமர்சனங்களில் இந்த அறியாமை வெளிப்பட்டது. ஆங்கில, இந்தி விமர்சனங்களில் படத்தை வானளாவ புகழ்ந்திருந்தனர். மாறாக தமிழ் ஊடகங்களில், உண்மை நிகழ்வுகளை திரித்து தலைவியை எடுத்திருப்பதாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. வசூலிலும் தலைவி தோல்வியே கண்டுள்ளது.
தலைவி படத்தை ரஜினி பார்க்க விரும்பியிருக்கிறார். அவருக்காக ஸ்பெஷலாக படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்தவர், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பாராட்டியுள்ளார். 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் மோசமான ஆட்சியால் மக்கள் வெறுப்புற்றிருந்த நேரத்தில், இந்த ஆட்சி தொடர்ந்தால் கடவுளாலும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என்று ரஜினி விமர்சித்தார்.
அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார். இந்த சிறப்பு வாய்ந்த சம்பவம் தலைவியில் இல்லை. இதேபோல் ஜெயலலிதாவின் பலவீனங்களை குறிக்கும் எந்தக் காட்சியும் படத்தில் இல்லை. அதனால், இயல்பாகவே
தலைவி தனது சுவாரஸியத்தை இழந்துள்ளது. படம் ரசிகர்களால் வரவேற்பு பெறாமல் போனதற்கு இது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைவி
பொதுவாக
ரஜினி ஒரு படத்தைப் பாராட்டினால், அவர் என்ன சொன்னார் என்பதை வைத்தே படத்தை விளம்பரப்படுத்துவார்கள். தலைவி விஷயத்தில் ரஜினி என்ன சொன்னார் என்பது
ரகசியமாகவே உள்ளது. படத்தைக் குறித்த தனது விமர்சனம் சர்ச்சையாகலாம் என்ற ரஜினியின் எச்சரிக்கையே இதற்கு காரணம் என்கிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.