• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalaivi: கொரோனாவால் தள்ளிப்போகும் தலைவி ரிலீஸ்

Thalaivi: கொரோனாவால் தள்ளிப்போகும் தலைவி ரிலீஸ்

தலைவி

தலைவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதமான தலைவி ஏப்ரல் 23 வெளியாவதாக அறிவித்த நிலையில், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

  • Share this:
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதமான தலைவி ஏப்ரல் 23 வெளியாவதாக அறிவித்த நிலையில், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

    ஜெயலலிதா மறைந்ததும் அவரது கதையை படமாக்க அரை டஜன் பேர் முன்வந்தார்கள். அதில் கௌதம் முந்திக் கொண்டு ரம்யா கிருஷ்ணனை ஜெயலலிதாவாக்கி வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வெளியிட்டார். அது நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து நித்யா மேனனை ஜெயலலிதாவாக்கி இன்னொரு படம். ஆனால், தலைவி தான் முழுமையான படமாக வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுகின்றனர்.

    தலைவியில் அரவிந்த்சாமி எம்ஜிஆராகவும், கங்கனா ரனவத் ஜெயலலிதாவாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார். ஸ்கிரிப்ட் சைடில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் இயக்குநர், எழுத்தாளர் அஜயன் பாலா. தலைவி முழுமையாக தயாரான நிலையில் அதன் ட்ரெய்லரை வெளியிட்டனர். அதற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்த நிலையில் ஏப்ரல் 23 படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர்.

    இந்த அறிவிப்புக்குப் பிறகு கோவிட் 19 வேகமாக பரவி, மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுப்பாடுகளின் நடுவில் தலைவியை வெளியிட்டால் போட்ட காசு திரும்பாது என்பதால், பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று மறுபடியும் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: