Home /News /entertainment /

இரண்டே மாதத்தில் இப்படியொரு மாற்றமா...? தலைவி பட நாயகியின் அதிரடி லுக்..!

இரண்டே மாதத்தில் இப்படியொரு மாற்றமா...? தலைவி பட நாயகியின் அதிரடி லுக்..!

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

”கதாபாத்திரத்திற்காக எந்த கடின உழைப்பையும் ஏற்கும் கங்கனா இந்த படத்திற்காகவும் தன்னை செதுக்கி வருகிறார்”

  • News18
  • Last Updated :
    தலைவி படத்திற்காக கங்கனா 20 கிலோ எடையைக் கூட்டியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய் படமாக எடுத்துவருகிறார். படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏற்று நடிக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இசைக்கு ஜி.வி.பிரகாஷ் உயிர் கொடுக்கிறார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒல்லியான உடல் தோற்றத்தில் சிக்கென இருக்கும் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவைப் போல் தோற்றமளிக்க இரண்டே மாதத்தில் 20 கிலோ எடையைக் கூட்டியுள்ளார்.



    கதாபாத்திரத்திற்காக எந்த கடின உழைப்பையும் ஏற்கும் கங்கனா இந்த படத்திற்காகவும் தன்னை செதுக்கி வருகிறார். அந்த கதாப்பாத்திரமாகவே தான் வாழ்ந்து வருவதாகவும், ஜெயலலிதாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் ஏற்கனே ஒருமுறை பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Thalaivi

    அடுத்த செய்தி