முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தலைவாசல் விஜய்யின் மகள் - குவியும் வாழ்த்து

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தலைவாசல் விஜய்யின் மகள் - குவியும் வாழ்த்து

குடும்பத்துடன் நடிகர் தலைவாசல் விஜய்

குடும்பத்துடன் நடிகர் தலைவாசல் விஜய்

தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா ஒரு நீச்சல் வீராங்கனை. இவர் நேபாள நாட்டின் தலைநகர் காத்தமெண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் தலைவாசல் விஜய். 90களில் இவர் இல்லாமல் வெளியாகும் படங்கள் மிகக் குறைவு. காதல் கோட்டை படத்தில் இவரது நடனமாடிய கவலைப்படாதே சகோதரா என்ற பாடல் அப்போது மிகப் பெரிய ஹிட்.

தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமானதன் காரணமாக இவருக்கு தலைவாசல் விஜய் என்றே இவரது பெயர் மாறிப்போனது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் டி பிளாக், யானை, லத்தி போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். பிற மொழி நடிகர்களுக்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்தும் வருகிறார்.

தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா

தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா ஒரு நீச்சல் வீராங்கனை. இவர் நேபாள நாட்டின் தலைநகர் காத்தமெண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாபா அபரஜித்துடன் ஜெயவீணா

இந்த நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித் என்பவரை திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

பாபா அபரஜித் ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர். மேலும் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket, Marriage