ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நெல்சன் இயக்கும் ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்!!

நெல்சன் இயக்கும் ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்!!

சிவராஜ் குமார் - ரஜினிகாந்த்

சிவராஜ் குமார் - ரஜினிகாந்த்

Thalaivar 169 : ரஜினியின் அடுத்த படத்துடைய திரைக்கதையை மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ள ரஜினியின் அடுத்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைகிறார்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படத்தை மெகா ஹிட்டாக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியுள்ளார்.

பீஸ்ட் படம் வெளி வருவதற்கு முன்பாக நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியை தராததால் ரஜினி அப்செட்டில் இருப்பதாகவும், இயக்குனர் மாற்றப்படுவார் என்றும் பேசப்பட்டது.

இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்

ஆனால் ரஜினி நெல்சனுடன் படம் பண்ணுவதை உறுதி செய்தார். இந்த படத்தில் திரைக்கதையை மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார். இதற்கு நெல்சனின் பீஸ்ட் படத்துடைய மோசமான திரைக்கதையே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியின் அடுத்த படத்தில் இணைகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - AK62 : அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா விக்னேஷ் சிவன்?

ரஜினியுடன் நடிப்பது குறித்து சிவராஜ் குமார் கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே ரஜினிக்கு என்னைத் தெரியும். அவருடன் இணைந்து நடிப்பதை அனைவரும் விரும்புவார்கள்.

இந்த படத்தின் கதை மற்றும் எனது கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திரையில் நானும், ரஜினியும் தோன்றுவதை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த காட்சிகள் பெங்களூரு அல்லது மைசூரில் படமாக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Rajinikanth