முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்த 'தலைக்கூத்தல்' படக்குழு

ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்த 'தலைக்கூத்தல்' படக்குழு

தலைக்கூத்தல்

தலைக்கூத்தல்

Thalaikoothal | இது கிராமப்புறங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஒருவகையான கருணைக்கொலை. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

  • Last Updated :

விக்ரம் வேதா போன்ற முக்கியமான திரைப்படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'தலைக்கூத்தல்'. இந்தப் படத்தை டிசம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்கினார்கள். சரியாக ஒரு மாதம் பத்து தினங்கள் முடிந்த நிலையில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பி இருக்கிறது படக்குழு.

கோவில்பட்டி, குற்றாலம் பகுதிகளில் முழு படப்பிடிப்பையும் நடத்தியுள்ளனர். இந்தப் படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் 'லென்ஸ்', 'தி மஸ்கிடோ பிலாசபி' ஆகிய படங்களை இயக்கியவர். இந்த இரு படங்களும் விமர்சனரீதியாக பாராட்டு பெற்றவை.

தலைக்கூந்தல் என்பதைத்தான் எழுத்துப் பிழையோடு தலைக்கூத்தல் என்று எழுதி இருப்பதாக தவறாக நினைக்க வேண்டாம். படத்தின் பெயர் தலைக்கூத்தல். இது கிராமப்புறங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஒருவகையான கருணைக்கொலை. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

கருணைக் கொலை குறித்து தமிழில் அதிக திரைப்படங்கள் வந்ததில்லை. சில திரைப்படங்களில் சில நிமிட காட்சிகள் மட்டுமே வந்து போயிருக்கிறது. முதல்முறையாக கருணைக்கொலையை பிரதான விஷயமாக வைத்து தலைக்கூத்தல் படத்தை எடுத்திருக்கிறார்கள். இது தமிழ்ச் சூழலில் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Entertainment, Samuthirakani, Tamil Cinema