Viswasam: விஸ்வாசம் திரைப்படம் செய்த சாதனை - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

அஜித்

2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  • Share this:
    விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடிச்சுதூக்கு’ என்ற பாடல் யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

    நடிகர் அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நயன்தாரா, அனிகா சுரேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    விஸ்வாசம் படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். கவிஞர்கள் தாமரை, விவேகா, யுக பாரதி, அருண் பாரதி பாடல்களை எழுதியிருந்தார்கள். 14 இசைக்கோர்வைகளை கொண்டதாக விஸ்வாசம் படத்தின் ஆல்பம் அமைந்தது.



    2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதோடு விஸ்வாசம் படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசியவிருதையும் இசையமைப்பாளர் டி. இமான் பெற்றார்.

    இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடல் தற்போது யூ-ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த விஷயத்தை இமான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: