• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Valimai: 1 கோடி பார்வைகளை கடந்த வலிமை மோஷன் போஸ்டர் - புதிய போஸ்டர் வெளியீடு!

Valimai: 1 கோடி பார்வைகளை கடந்த வலிமை மோஷன் போஸ்டர் - புதிய போஸ்டர் வெளியீடு!

வலிமை

வலிமை

குறுகிய காலத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை வலிமை மோஷன் போஸ்டர் கடந்துள்ளது. அதனை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டது.

  • Share this:
    வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்ததையொட்டி, புதிய போஸ்டரை வலிமை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதற்குப் பின் தொடங்கப்பட்ட படங்கள் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், டீஸர் என்று ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி சொல்ல, வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கே வெளியாகாமல் இருந்தது. ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி முதல் அம்மன் கோவில் பூசாரிவரை அனைவரையும் கதறவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து மைதானங்களையும் விடவில்லை. அங்கேயும் வலிமை அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்தனர்.

    Thala Ajith Valimai motion poster crosses 1 Crore views, valimai movie, valimai update, thala ajith, ajith fans, ajith fan, அஜித், வலிமை அப்டேட், அஜித் ரசிகர்கள், Valimai motion poster, Valimai motion poster 1 crore views, Valimai motion poster youtube, valimai new poster, valimai release, boney kapoor, 1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை மோஷன் போஸ்டர், வலிமை மோஷன் போஸ்டர், அஜித் வலிமை மோஷன் போஸ்டர், போனி கபூர்
    வலிமை புதிய போஸ்டர்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், திடீரென வலிமை பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். குறுகிய காலத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை அது கடந்துள்ளது. அதனை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டது.

    வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். விரைவில் முக்கியமான காட்சியை படமாக்க படக்குழு வெளிநாடு செல்கிறது. அந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும். தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம். ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாவதால், வலிமை வெளியாகுமா என்ற சந்தேகமும் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: