முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இன்று அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்... ‘வலிமை’ அட்டகாச அப்டேட்!

இன்று அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்... ‘வலிமை’ அட்டகாச அப்டேட்!

அஜித்

அஜித்

வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அஜித்தின் வலிமை படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூரின் பட நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடித்து தருவதாக உறுதியளித்திருந்தார் விஜய். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்த கையோடு வலிமையில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03-க்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ajith, News On Instagram, Valimai