• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஃபர்ஸ்ட் சிங்கிளை போலவே தாமதமான வலிமை முன்னோட்டம் - பொறுமை இழந்த ரசிகர்கள்

ஃபர்ஸ்ட் சிங்கிளை போலவே தாமதமான வலிமை முன்னோட்டம் - பொறுமை இழந்த ரசிகர்கள்

அஜித்

அஜித்

இன்று மாலை 6.03 மணிக்கு வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  • Share this:
    வலிமை முன்னோட்டம் வெளியாக தாமதமான சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

    ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.

    நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூரின் பட நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடித்து தருவதாக உறுதியளித்திருந்தார் விஜய். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்த கையோடு வலிமையில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று மாலை 6.03 மணிக்கு வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் எந்தத் தகவலும் வெளியாகாததால் பொறுமை இழந்த ரசிகர்கள், மீம்ஸ் மற்றும் பதிவுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    இதற்கு முன்பு வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டின் போதும், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட தாமதமானது. தற்போது அடுத்த அப்டேட்டிலும் தொடரும் இந்த தாமதம் ரசிகர்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: