மீண்டும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்!

அஜித்

சில மாதங்களுக்கு முன்பு அவர் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆறு பதக்கங்களை வென்றார்.

 • Share this:
  நடிகர் அஜித் மற்றுமொரு துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பன்முக நடிகர் அஜித், கார், பைக், ஏரோ மாடலிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். கடந்த 2019-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொண்டார் அஜித். இதற்கிடையே அவர் செப்டம்பர் மாதம் நடக்கும் மற்றொரு தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அஜித் இந்த போட்டிக்காக தீவிர துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ரைபிள் கிளப்பில் அவரை அடிக்கடி காண முடிகிறது. மேலும் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஆறு பதக்கங்களை வென்றார். இது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, அஜித்தின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டானது.

  அஜித் தற்போது இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் 'வலிமை' படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் இறுதி படப்பிடிப்பு அட்டவணைக்காக 'வலிமை' படக்குழு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் அஜித்துடன் இணைந்து, ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் யோகி பாபு நடிப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: