Thala Ajith: அடுத்தப் படத்திற்கு பிளான் ரெடி - புது ஸ்டைலை பின்பற்றும் அஜித்!

அஜித்

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  • Share this:
    அஜித் தனது அடுத்தப் படத்தில் முன்பு எப்போதும் இல்லாதபடி புதிய ரூட்டை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் ‘நேர்க்கொண்ட பார்வை’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய சில காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்நிலையில், வலிமை படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்தப்படம், அதாவது அவரது 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தின் அந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளாராம். குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில், நடிகர் அஜித் இரண்டே மாதத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: