’வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு’ - வைரலாகும் அஜித்தின் பாடல்!

அஜித்

’தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு’ என்ற வரிகளை அஜித் ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

 • Share this:
  நடிகர் அஜித்தின் ’சேவல் கொடி பறக்குதடா' என்ற பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. அஜித் நடித்திருந்த இந்தப் படம் தமிழகத்தில் 200 திரைகளில் வெளியானது. அதோடு திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. படத்தில் நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பில்லா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடலாசிரியர், பா.விஜய் எழுதியிருந்தார். இந்நிலையில் தற்போது பில்லா படத்தில் இடம்பெற்றுள்ள, ‘சேவல் கொடி பறக்குதடா’ என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  குறிப்பாக அந்தப் பாடலில் ’தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு’ என்ற வரிகளை அஜித் ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அன்றே சொன்னார் அஜித் எனக் குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை பகிர்ந்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: