இந்த முறை பைக், கார் இல்லை - வலிமையில் அஜித்தின் புதிய முயற்சி!

இந்த முறை பைக், கார் இல்லை - வலிமையில் அஜித்தின் புதிய முயற்சி!

நடிகர் அஜித்

நடிகர் அஜித் கார் மற்றும் பைக்குகளை ஒட்டுவார் எனபது ரகசியம் அல்ல. அவர் பல பந்தய போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது வலிமை படத்தில் வேறு ஒரு புதிய முயற்சியை அவர் கையாண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:

  அந்தப் படத்தில் அஜித் முதன்முறையாக ஒரு பஸ்ஸை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆன்லைன் போர்ட்டல் ஒன்றில் வெளியான அறிக்கையின்படி, அஜித்தின் 'வலிமை' படத்தில் இடம்பெறும் ஒரு சேஸிங் காட்சியில் அவர் ஒரு பஸ்ஸை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது 'வலிமை' படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றாக இருக்கும் எனவும், இந்தக் காட்சியை பார்க்கும் ரைகர்கள் தியேட்டரில் கொண்டாடுவார்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  முன்னதாக, 'வலிமை' தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு நேர்காணலில், அஜித் டூப் பயன்படுத்தாமல், 'வலிமை' படத்தில் சில ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார் என்றார். குடும்ப நாடகமான இப்படம் திடமான ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளது. இதில் போலிஸாக அஜித் நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

  ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தின் சில காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட இருக்கின்றன. இந்தப் படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: