• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ajith: ’வாழு வாழ விடு’ - திரைத்துறையில் 30-ம் ஆண்டில் நுழையும் அஜித் அறிக்கை!

Ajith: ’வாழு வாழ விடு’ - திரைத்துறையில் 30-ம் ஆண்டில் நுழையும் அஜித் அறிக்கை!

அஜித்

அஜித்

ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன்.

  • Share this:
    நடிகர் அஜித் தான் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகளை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் அஜித் திரையுலகில் நுழைந்து 30-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 1990-ஆம் ஆண்டு, இயக்குனர் செண்பக ராமன் என்பவர் இயக்கிய, 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் ஸ்கூல் சிறுவனாக அறிமுகமானார் அஜித். இதைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு வெளியான, 'அமராவதி' படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகிய மூவரும் நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு மற்றும் வாழ விடு! எப்பொழுதும் என் அன்பு அனைவருக்கும் உண்டு. அஜித் குமார்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

    இதனை அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: