Ajith: துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் - வைரலாகும் வீடியோ!

அஜித்

மார்ச் மாதம் அவர் துப்பாக்கி சுடும் இதே போன்ற வீடியோ ஒன்று வைரலாகியது.

  • Share this:
    நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பன்முக நடிகர் அஜித், கார், பைக், ஏரோ மாடலிங் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர். கடந்த 2019-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொண்டார் அஜித். இந்நிலையில் தற்போது, சென்னை துப்பாக்கி பயிற்சி அகாடமியில் அஜித் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. முழுக்க முழுக்க கறுப்பு நிற ஆடை அணிந்துள்ள அஜித், இலக்கை குறிவைத்து சுடுவதை அதில் காண முடிகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மார்ச் மாதம் அவர் துப்பாக்கி சுடும் இதே போன்ற வீடியோ ஒன்று வைரலாகியது. நடிகர், ரேஸ் கார் ஓட்டுநர், ஸ்டில்-புகைப்படக்காரர், மாடல் மற்றும் சிறந்த சமையல்காரர் என ரசிகர்களை வாவ் சொல்ல வைக்கும் அஜிதின் இந்த வீடியோவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    தவிர, அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: