ஏழை மக்களின் பசியைப் போக்க அட்டகாச ஐடியா! பாராட்டைப் பெறும் அஜித் ரசிகர்கள்!

அஜித்

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள், அதன்மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 • Share this:
  ஏழை மக்களின் பசியைப் போக்க அஜித் ரசிகர்கள் செய்த விஷயம், சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.

  இந்தியாவில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதோடு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள். மறுப்பக்கம் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள், அதன்மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

  இந்நிலையில் புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள், ‘பசித்தால் எடுத்துக்கொள்’ என்ற பதாகையுடன் கூடிய தள்ளுவண்டியில் சாப்பாடு, தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை நிரப்பி, தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்லும் விதமாக அந்த வண்டியை சாலையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.

  இது குறிப்பாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு வெகுவாக பயன்படுகிறது. இந்த விஷயத்தை முன்னெடுத்த அஜித் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: