நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்...!

நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் எல்லா திரையரங்களிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

news18
Updated: August 6, 2019, 12:20 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்...!
அஜித்குமார்
news18
Updated: August 6, 2019, 12:20 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் குறித்த தவவல்கள் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்னும் இரு தினங்களில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து நேர்கொண்ட பார்வை படத்தை உருவாகியிருப்பதாக இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்

நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் எல்லா திரையரங்களிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் திரையரங்கள் முன் குவிந்துள்ளனர்.


இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இல்லாமால் இது சாத்தியமில்லை. நேர்கொண்ட பார்வை படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.


இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்காக படம் சென்னையில் திரையிடப்பட்டது. படத்தில் அஜித்தின் பெயர் பரத் சுப்ரமணியன் என்று தெரியவந்துள்ளது.

Also watch

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...