• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ajith - Yogi Babu: யோகி பாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்!

Ajith - Yogi Babu: யோகி பாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்!

அஜித் - யோகி பாபு

அஜித் - யோகி பாபு

வலிமை படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் யோகி பாபு.

  • Share this:
    வலிமை படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் யோகி பாபு.

    யோகி பாபு தமிழ் சினிமாவில் இருக்கும் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவர் நிறைய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதோடு யோகி பாபு மற்றும் அஜித் இதுவரை மூன்று படங்களில் பணியாற்றியதால் ஒரு நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், இருவரும் வரவிருக்கும் 'வலிமை' படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்பதும் ஏற்கனவே நீங்கள் அறிந்ததே.

    அண்மையில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கான நேர்காணலில் பேசிய யோகி, அஜித் தனது முந்தைய படங்களின் போது தனது திருமண தேதி குறித்து விசாரித்ததை நினைவு கூர்ந்தார். அதோடு விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை அடிக்கடி வற்புறுத்தினாராம். இதையடுத்து திருமணம் முடிந்து 'வலிமை' படப்பிடிப்புக்கு சென்ற யோகி பாபுவை, அரவணைத்து வரவேற்று, 'குடும்பம் முக்கியம்' என்று அறிவுறுத்தினாராம் அஜித். இத்தகவலை தற்போது யோகி பாபு பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

    'அமர்களம்' படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது ஷாலினியை காதலித்து மணந்துக் கொண்டார் அஜித். திரைப்பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் தவறாமல் நேரத்தை செலவிடுவேன் என்று ஷாலினிக்கு அஜித் வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அவர் தனது ஓய்வு நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலவழிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

    தவிர, அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக 'வலிமை' படத்தின் முதல் தோற்றம் மே 1-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: