Ajith: அஜித்தின் ’சிட்டிசன்’ வெளியாகி 20 ஆண்டுகள் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிட்டிசன் அஜித்

20 years of சிட்டிசன் என்ற பெயரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் இதனை இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

  • Share this:
    நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

    நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் சிட்டிசனும் ஒன்று. அந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைவதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குநர் சரவண சுப்பையா இயக்கத்தில் தேவா இசையமைத்து எழுத்தாளர் பாலகுமாரன் வசனத்தில் பல்வேறு மாறுபட்ட கெட்டப்புகளில் அஜித் நடித்த இந்த சிட்டிசன் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியானதால், இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இந்தத் திரைப்படம், அஜித்தை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. இதன் காரணமாக 20 years of சிட்டிசன் என்ற பெயரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் இதனை இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசியல் பதவியில் இருப்போர் மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் சுயநலத்தாலும் ஊழலாலும் அத்திப்பட்டி என்ற கிராமமே அழிந்துவிட, அங்கிருந்து தப்பிக்க நேர்ந்த ஒற்றை மனிதன் தன் கிராமத்தினரின் அழிவுக்காகப் பழிதீர்ப்பதே சிட்டிசன் படத்தின் ஒன் லைன். ஒரு கிராமமே தமிழக வரைபடத்திலிருந்து அழிந்துவிடுகிறது என்னும் கற்பனையே பலரை ஆச்சரியப்படுத்தியது. நாயகனான அஜித் நடுத்தர வயது போக்குவரத்துக் காவல் அதிகாரி, உடல் மெலிந்த ஆட்சியர், பருமனான அரசியல்வாதி, முகம் வீங்கி வெளிறிப்போன முதியவர், அப்பாவித்தனம் மிக்க மீனவர் என வித்தியாச கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

    தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: