‘தல 59’ - வெளியானது புதிய அப்டேட்... டாப்ஸி கதாபாத்திரம் இவருக்கா?

அஜித் நடிக்கும் அவரது 59-வது படத்தில் நடிகை நஸ்ரியா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தல 59’ - வெளியானது புதிய அப்டேட்... டாப்ஸி கதாபாத்திரம் இவருக்கா?
அஜித்| பிங்க் பட போஸ்டர்
  • News18
  • Last Updated: December 19, 2018, 7:00 PM IST
  • Share this:
அஜித் நடிக்கும் அவரது 59-வது படத்தில் நடிகை நஸ்ரியா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் அஜித், இயக்குநர் வினோத் இயக்கும் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படம் மே மாதத்தில் அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கதாநாயகனை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களிலேயே அஜித் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், முழுக்க முழுக்க ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விவாதத்தை உருவாக்கும் படியான பிங்க் திரைப்படத்தில் அவர் எவ்வாறு நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


பிங்க் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். அதேநேரத்தில் டாப்ஸி நடித்திருந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நஸ்ரியாவின் காதலராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: December 19, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்