ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தாய் கிழவி' தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 வருடங்களுக்கு பின் உருவான பாடல் வெளியீடு

'தாய் கிழவி' தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 வருடங்களுக்கு பின் உருவான பாடல் வெளியீடு

 தாய் கிழவி - பாடல்

தாய் கிழவி - பாடல்

தனுஷ்-அனிருத் கூட்டணியில் 7 வருடங்களுக்குப் பிறகு உருவான முதல் பாடல் வெளியாகி உள்ளது. 

  • 1 minute read
  • Last Updated :

தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் மூலம் அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இதற்கு பிறகு அவர்கள் கூட்டணியில் வெளியான வேலையில்லா பட்டதாரி, மாரி,  தங்கமகன் உள்ளிட்ட அனைத்து படங்களின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.  அத்துடன் தனுஷுக்கு தீம் இசைகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளார் அனிருத்.

ஆனால் ஒரு சில காரணங்களால் தங்க மகன் திரைப்படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.  இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் பரவின.  அதை உறுதி செய்யும் விதமாக தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இருந்தாலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இடம்பெறும் இளமை திரும்புதே என்ற பாடலை தனுஷ் எழுத அனிருத் இசையமைத்திருந்தார்.

' isDesktop="true" id="762984" youtubeid="q6LjN1UVPkE" category="cinema">

ஆனால் தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் மித்ரன் R. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.  அந்தப் படத்தில் இடம்பெறும் தாய்க்கிழவி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். அவர்கள் கூட்டணியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கும் தாய்க்கிழவி பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

அந்தப் பாடலுக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை கிடைத்து வருகின்றன. குறிப்பாக DNA கூட்டணி என ரசிகர்களால் அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான முந்தைய பாடல்கள் போல் இல்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

First published:

Tags: Anirudh, Dhanush