ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vikram: 'விக்ரம்’ படத்திற்காக டெஸ்ட் ஷூட்டை முடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி!

Vikram: 'விக்ரம்’ படத்திற்காக டெஸ்ட் ஷூட்டை முடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி!

கமல் - விஜய் சேதுபதி

கமல் - விஜய் சேதுபதி

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே அட்டவணையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ’விக்ரம்’ படத்திற்காக கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்குமான டெஸ்ட் ஷூட் நடந்து முடிந்துள்ளது.

  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கொரோனா தொற்று குறைந்துள்ளதால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சமீபத்தில், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடந்துள்ளது.

  அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் விக்ரம் திரைப்படம் அரசியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. அதோடு, இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே அட்டவணையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கமல் ஹாசன் தேர்தல் பணிகளை முடித்ததும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதியளித்தது. இதனால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay sethupathi