• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kangana Ranaut: கங்கனா தொகுத்து வழங்கவிருக்கும் டேட்டிங் நிகழ்ச்சி

Kangana Ranaut: கங்கனா தொகுத்து வழங்கவிருக்கும் டேட்டிங் நிகழ்ச்சி

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கிறார்கள்.

  • Share this:
    விதவிதமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. பிக் பாஸ் நிகழ்ச்சியும் அப்படியானதே. பிக் பாஸை சோட்டா பாஸாக்கும் ஒரு நிகழ்ச்சியை கங்கனா ரனவத் தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியின் பெயர், டெம்டேஷன் ஐலெண்ட்.

    முன் பின் அறிமுகமில்லாத ஆண், பெண்களை தனித்தீவில் தங்க வைப்பார்கள். ஆளுக்கொரு ஜோடியை பிடித்துக் கொள்ள வேண்டும். விதவிதமான டாஸ்க்குகள் அளிக்கப்படும். இதன் முக்கிய அம்சம், இந்த ஆணும், பெண்ணுக்கும் ஏற்கனவே நிஜத்தில் காதலர்/காதலி இருப்பார்கள். அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கிறார்கள். கங்கனா ரனவத் இதனை தொகுத்து வழங்குகிறார். பிரபல ஓடிடி தளம் இதனை தயாரித்து, ஒளிபரப்புகிறது. சரி, ஏன் தொலைக்காட்சிக்குப் பதில் ஓடிடி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொலைக்காட்சி என்றால் இதில் இடம்பெறப்போகும் நெருக்கமான காட்சிகளுக்கு எதிர்ப்பு வரும். ஓடிடிக்கு சென்சார் தேவையில்லை. அதனால், ஓடிடியில் ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் பிரபலமடைந்தாலும் இந்த நிகழ்ச்சி முதலில் ஒளிபரப்பானது நெதர்லாந்தில். அங்கு பிளைன்ட் பெயித் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அது ஹிட்டாக, அதனை அப்படியே அமெரிக்காவில் தயாரித்து ஒளிபரப்பினார்கள்.

    கங்கனாவின் முதல் ஓடிடி நிகழ்ச்சி இது என்பது முக்கியமானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: