பேட்ட படத்தை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

இவ்வளவு நாட்களாக  ரசிகர்கள் ரஜினியின் படங்களில் எதை பார்த்து ரசித்தார்களோ அனைத்தையும் ஒரே படத்தில் வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்

news18
Updated: January 11, 2019, 3:57 PM IST
பேட்ட படத்தை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்
இவ்வளவு நாட்களாக  ரசிகர்கள் ரஜினியின் படங்களில் எதை பார்த்து ரசித்தார்களோ அனைத்தையும் ஒரே படத்தில் வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்
news18
Updated: January 11, 2019, 3:57 PM IST
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ரஜினியின் பேட்ட படத்தை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் படம் முதல் நாளில் 1.12 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இவ்வளவு நாட்களாக  ரசிகர்கள் ரஜினியின் படங்களில் எதை பார்த்து ரசித்தார்களோ அனைத்தையும் ஒரே படத்தில் வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ்.



படம் குறித்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கானது, அதில் நானும் ஒருவன். ஒரே வார்த்தைதான் ‘தலைவா’. சினிமா துறையில் மிகச்சிறந்த திறமைசாலிகளில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு எப்பவும் போல சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். பேட்ட திரைப்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்



also see

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்