ஷங்கர் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி?

ஷங்கர் படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி?

சிரஞ்சீவி - ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தில் அவரது தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி நடிக்கிறார்.

 • Share this:
  ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தில் அவரது தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி நடிக்கிறார்.

  கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த ஷங்கர், கமலின் அரசியல் ஹேங் அவுட் காரணமாக தெலுங்கு, தமிழில் ராம் சரண் தேஜாவை வைத்து படம் இயக்க முடிவு செய்து அதற்கான வேலையை பல வாரங்கள் முன்பே தொடங்கினார். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் ராம் சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவியை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இதில் முதல்முறையாக ராம் சரணும் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து ஷங்கரின் படத்திலும் அப்பா, மகன் இணைய உள்ளது ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.

  இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனமான லைகா நீதிமன்றத்தை அணுகியதும், ஷங்கருக்கு தடை போட மறுத்த நீதிமன்றம், இதுகுறித்து ஷங்கரிடம் விளக்கம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு குறித்த கவலையின்றி ராம் சரண் படத்தை தொடங்குவதில் ஷங்கர் தீவிரமாக உள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: