ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’ – தெலங்கானா அரசு அறிவிப்பு

‘மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’ – தெலங்கானா அரசு அறிவிப்பு

நடிகர் கிருஷ்ணாவின் மறைவையொட்டி அவது மகன் மகேஷ் பாபுவுக்கு அறுதல் தெரிவிக்கும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்.

நடிகர் கிருஷ்ணாவின் மறைவையொட்டி அவது மகன் மகேஷ் பாபுவுக்கு அறுதல் தெரிவிக்கும் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்.

ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

  தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை காலமானார் கிருஷ்ணா. அவருக்கு வயது 79 . அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

  79 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். அத்துடன் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தவர் நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் திரைச் சாதனைகள்!

  கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் கிருஷ்ணாவின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சோமேஷ் குமாருக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிறப்பித்துள்ளார். இதையொட்டி, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

  ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கச்சிபோலி மைதானத்திற்கு கிருஷ்ணாவின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

  தந்தை கிருஷ்ணாவுடன் நடிகர் மகேஷ் பாபு... அரிய புகைப்படங்கள் ஒரு லிஸ்ட்!

  கடந்த ஜனவரியில் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவும், கடந்த செப்டம்பரில் தாயார் இந்திரா தேவியும் மறைந்த நிலையில், இன்று அவரது தந்தை கிருஷ்ணா காலமாகியுள்ளார்.

  ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Tollywood