ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கிருஷ்ணா

கிருஷ்ணா

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா ஆபதான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும்,  நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.  அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Also read...

80 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார்.  அத்துடன் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.  இந்த நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி ஹைதராபாத்தில் காலமான நிலையில் தற்போது அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதித்திருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mahesh babu