BA Raju: பிரபல தெலுங்கு பி.ஆர்.ஓ மறைவு - மகேஷ் பாபு இரங்கல்

பி.ஏ.ராஜுவுடன் மகேஷ் பாபு

ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத், தமிழ் நடிகர்கள் விஷால் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜு மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    தெலுங்கு திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளர் பி.ஏ.ராஜூவின் திடீர் மறைவு திரை நட்சத்திரங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலருக்கும் பி.ஆர்.ஓ-வாக இருந்து வந்தவர் பி.ஏ.ராஜு. அதோடு விஷால் உள்பட ஒருசில தமிழ் நடிகர்களுக்கும் பி.ஆர்.ஓவாக அவர் இருந்து வந்தார்.

    தவிர சினிமா பத்திரிகையாளராகவும், திரைப்படங்களின் புரமோஷன்களிலும் சிறப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பி.ஏ.ராஜு காலமானார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு தெலுங்கு திரையுலகினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.



    இதையடுத்து ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, தேவிஸ்ரீபிரசாத், தமிழ் நடிகர்கள் விஷால் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் பிஆர்ஓ ராஜு மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    ”பி.ஏ.ராஜுவின் திடீர் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் என் குழந்தை பருவத்திலிருந்தே அவரை அறிந்திருக்கிறேன். நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணம் செய்தோம், அவருடன் நான் மிகவும் நெருக்கமாக பணியாற்றினேன். ஒரு முழுமையான தொழில்முறை மற்றும் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மென்மையான மனிதர். எங்கள் குடும்பத்திற்கும் ஊடக சகோதரத்துவத்திற்கும் ஒரு பெரிய இழப்பு” என மகேஷ் பாபு, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: