Home /News /entertainment /

சரித்திரம் திரும்புகிறதா? தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் தெலுங்குப் படங்கள்..

சரித்திரம் திரும்புகிறதா? தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் தெலுங்குப் படங்கள்..

புஷ்பா திரைப்படம்

புஷ்பா திரைப்படம்

Allu Arjun Pushpa Movie : அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் டிசம்பர் 17 இந்த மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

ஒருகாலத்தில் தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழக திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. அந்த சரித்திரம் மீண்டும் திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

தெலுங்கில் தயாராகும் சிரஞ்சீவி படங்களின் தமிழ் டப்பிங்குக்கு முன்பு தமிழகத்தில் பெரிய மார்க்கெட் இருந்தது. சண்டைக் காட்சிகளுக்காகவும், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகளுக்காவும், அவர்களின் கவர்ச்சி நடனங்களுக்காகவும்  அவை விரும்பிப் பார்க்கப்பட்டன. விஜயசாந்தியின் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்துக்குப் பிறகு அவரது படங்கள் தமிழில் 'டப்' செய்யப்பட்டு ரெக்கைக்கட்டி பறந்தன. டாக்டர் ராஜசேகர் இதுதாண்டா போலீஸ் சண்டைப் படம் மூலம் தமிழகத்தில் நுழைந்து கொஞ்சகாலம் கோலோச்சினார்.

அதன் பிறகு அந்த ஆதிக்கம் தணிந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜுனியர் என்டிஆர் உள்பட யாருடைய படமும் தெலுங்கில் வெளியாகும் அதேநாள் தமிழில் 'டப்' செய்யப்பட்டு வெளியாவதில்லை. அரிதாக வெளியானாலும் எந்த சத்தத்தையும் ஏற்படுத்தியதில்லை. ராஜமௌலியின் நான் ஈ, பாகுபலி படங்கள் ஓடியதை ஒரு விதிவிலக்கு எனலாம். அவை இந்திய அளவிலான பார்வையாளர்களை குறிவைத்து எடுக்கப்பட்டவை.
ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது



also read : மணி ஹெய்ஸ்ட் சீசன் 5 இறுதி பாகம் எப்படி இருக்கிறது?

தெலுங்குப் படங்கள் பான் - இந்தியா படங்களாக தயாராகின்றன. தெலுங்கு, தமிழ், இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் டிசம்பர் 17 இந்த மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை சுமார் 6 கோடிகளுக்கு வாங்கியிருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். ஒவ்வொரு திரையரங்கிலும் தமிழின் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேனர், கட்அவுட் வைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இத்துடன் நிற்கவில்லை.



அடுத்த மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் லைகா வாங்கியுள்ளது. அதை இதைவிட அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 14 வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் தமிழ் பதிப்பின் விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது. அவர்களும் இதேளயவு முனைப்புடன் படத்தை வெளியிட உள்ளனர்.



தமிழகத்தின் 'ஏ' சென்டர்களில் ஆங்கில, இந்திப் படங்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகையில் இப்போது தெலுங்குப் படங்களும் அவற்றுடன் இணைந்துள்ளன. தமிழ் சினிமா உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Allu arjun

அடுத்த செய்தி